பென் ஸ்டார்க்ஸ் குறித்த தீர்ப்பு இன்று

Tuesday, 14 August 2018 - 12:59

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இங்கிலாந்தின் கிரிக்கட் வீரர் பென் ஸ்டார்க்ஸ் மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து பென் ஸ்டாக்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை இடம்பெறுகிறது.

இதுதொடர்பில் நியமிக்கப்பட்ட தீர்ப்பாய விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்கள் ஏகமனதான தீர்ப்பு ஒன்றை இன்று அல்லது நாளைக்குள் வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில், இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி பெரும்பான்மை தீர்ப்பாய உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் தமது தீர்ப்பை வழங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பென் ஸ்டார்க்ஸ் மற்றும் ரயான் அலி ஆகியோர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வரையறுக்கப்படாத அபராதமும் விதிக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









Exclusive Clips