%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 11 September 2018 - 9:21
ஆசிய கிண்ண போட்டி தொடர்பில் ஐ.சி.சி எடுத்துள்ள புதிய தீர்மானம்
2,348

Views
இந்தமுறை ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கும் சர்வதேச ஒருநாள் அந்தஸ்த்து வழங்கப்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவை இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது.

சர்வதேச கிரிக்கட் அந்தஸ்த்தை பெற்றுக் கொண்ட அணியும், அந்தஸ்த்து இல்லாத அணியும் விளையாடும் போட்டிகளுக்கு சர்வதேச ஒருநாள் அந்தஸ்த்தை வழங்குவதில் சிக்கல் நிலைமை நீடித்துவந்தது.

எனினும் இனிவரும் காலங்களில் இவ்வாறான கலப்பு போட்டிகள் அனைத்திற்கும் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்த்தினை வழங்க சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்திருக்கிறது.

இந்த கொள்கை மாற்றத்தின் அடிப்படையில் பலன்பெறுகின்ற முதலாவது தொடராக எதிர்வரும் ஆசிய கிண்ணத் தொடர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளின் போதும், இதே நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

இந்தமுறை ஆசிய கிண்ணத் தொடருக்கு சர்வதேச ஒருநாள் அந்தஸ்த்து கிடைக்கப்பெறாத ஹொங்கொங் அணியும் பங்குபற்றுகின்றமையாலேயே இந்த நிலைமை நிலவியது.

அதேநேரம் இந்த தொடரில் பங்கேற்கின்ற ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஏனைய 5 அணிகளும் டெஸ்ட் அந்தஸ்த்து உடைய அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE