+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D..
Friday, 14 September 2018 - 14:01
ரவி சாஷ்த்திரி கடும் நெருக்கடிக்குள்..
232

Views
இந்திய கிரிக்கட் அணியின் தொடர் தோல்விகளை அடுத்து, அதன் பயிற்றுவிப்பாளர் ரவி சாஷ்த்திரி கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்க அணிக்கு தொடரான டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றதை அடுத்து, இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4க்கு1 என்ற கணக்கில் தோல்வியுள்ளது.

இதற்கு மத்தியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரவி சாஷ்த்திரி, கடந்த 15 ஆண்டுகளில் உருவான வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் அணியாக தற்போதைய இந்திய அணி காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தவிடயங்களின் அடிப்படையில் கிரிக்கட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் அவுஸ்திரேலியா மற்றும் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டி என்பன இந்திய அணிக்கு சவால் மிக்கதாக அமையும் என கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE