தோல்வி குறித்து கவலையுடன் வாழ்த்து தெரிவித்த அஞ்சலோ மெத்தியூஸ்

Tuesday, 18 September 2018 - 13:50

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D
ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்விக்கு பின்னர் இலங்கை அணி ஆசிய கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்த தோல்வி தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ்,

இம்முறை ஆசிய கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணி மூன்றே நாட்களில் வெளியேறி ஆப்கானிஸ்தான் அணியுடன் நேற்று தோல்வியடைந்தமை சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சி விடயம் என கூறியுள்ளார்.

இது முழு அணியின் எதிர்பார்ப்பையும் உடைந்தெறிந்த தோல்வியென தெரிவித்த மெத்தியூஸ், இதற்கு தான் உள்ளிட்ட துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பு கூற வேண்டும் என கூறினார். 

பங்களாதேஸ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியால் 150 ஓட்டங்களை கூட தாண்ட முடியவில்லை.

துடுப்பாட்டம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டாலும் இடையில் வரும் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்க தவறியுள்ளனர்.

எமது அணி விளையாடிய விதம் தொடர்பில் கவலையளிக்கிறது என தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் வெற்றியடைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐந்து முறை ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடன் படுதோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips