இந்தியாவை வெல்வது தொடர்பில் பாகிஸ்தானுக்கு ஆலோசனை வழங்கிய சங்கா!!

Wednesday, 19 September 2018 - 10:44

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%21%21
ஆசிய கிண்ண தொடரின் ஏ பிரிவில் இன்றைய தினம் முக்கிய போட்டியொன்று இடம்பெறவுள்ளது.

ஆசியாவின் பிரபல அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த போட்டியில் மோதவுள்ளன.

இன்று இடம்பெறவுள்ள போட்டி மிக கூர்மையாக அவதானிக்கப்படுவதாக கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தான் அணிக்கும் ஹொங்கொங் அணிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற போட்டிக்கு இடையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் மற்றும் உஸ்மன் சின்வாரிக்கும், இன்று இடம்பெறவுள்ள போட்டிக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் பிரிமியர் லீக் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், அமைதியாக இருந்து தமது உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்ளுமாறு சங்கக்கார அவ்விரு வீரர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.








Exclusive Clips