நேற்றைய ஆசிய கிண்ணப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்!!

Monday, 24 September 2018 - 7:19

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
நேற்றைய ஆசிய கிண்ணப் போட்டிகளில் இந்தியா , பங்களாதேஸ் அணிகள் வெற்றி!

ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய இந்திய அணி 39.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டினை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

இந்திய அணிசார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களையும் , சிகர் தவான் 114 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில், பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.







Exclusive Clips