இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த மொஹமட் ஷசாட்!!

Tuesday, 25 September 2018 - 20:59

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%21%21
ஆசிய கிண்ண சுப்பர் - 4 சுற்றின் மேலும் ஒரு போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோதுகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி , துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 252 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஷசாட் 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

7 ஆறு ஓட்டங்கள் மற்றும் 11 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

மொஹமட் நபி 64 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜா 3 விக்கட்டுக்களையும் , குல்தீப் யாதவ் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி இந்திய அணிக்கு 253 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.









Exclusive Clips