%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%3F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
Thursday, 11 October 2018 - 16:44
லசித் மாலிங்க இப்படிப்பட்டவரா? சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
46

Shares
5,617

Views
பாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வௌிப்படுத்தியதுடன் #meToo என்ற ஹேஸ் டெக்கில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் , மும்பையை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட ரீதியில் தகவல் அளித்துள்ளார்.

குறித்த பதிவை சின்மயி தனது ட்விட்டர் தளத்தின் சற்று முன்னர் வௌியிட்டார்.

அதில் , 'மும்பையை சேர்ந்த நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐபிஎல் இடம்பெறும் போது ஒரு நட்சத்திர உணவகமொன்றில் தங்கியிருந்தேன்.

அங்கே , எனது தோழியை நான் தேடிய போது உங்கள் தோழி எனது அறையில்தான் உள்ளார் என கூறிய லசித் மாலிங்க என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்று பார்த்ததில் எனது தோழி அங்கு இருக்கவில்லை.

பின்னர் , மாலிங்க என்னை அவரது படுக்கையில் தள்ளினார்.

என் மீது விழுந்து என்னை முத்தமிட முயற்சித்தார்.

அவரின் உடல் எடையுடன் என்னால் போராட முடியவில்லை.

நான் எனது கண்களையும் வாயையும் மூடிக்கொண்டேன்.

இருந்தும் , லசித் மாலிங்க என்னை முத்தமிட்டார்.

பின்னர் , உணவக ஊழியர்கள் அறையின் கதவை தட்டிய நிலையில், நான் குளியலறைக்குச் சென்று முகத்தை கழுவிக்கொண்டு அவர்களுடன் வௌியேறினேன்.

இது தொடர்பில் நான் வௌியே கூறினால் , பிரபல வீரரின் அறைக்கு நீ எதற்கு சென்றாய் என என் மீது கேள்வி எழுப்புவார்கள் என எனக்கு தெரியும்' என குறித்த பெண் அதில் குறிப்பிட்டுள்ளார்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE