இங்கிலாந்து அணியில் இருந்து லியாம் டாவ்சன் நீக்கம்!!

Tuesday, 16 October 2018 - 7:41

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21
இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் ( Liam Dawson) நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளைய தினம் பல்லேகலையில் நடைபெறவுள்ளது.

இதற்கான பயிற்சிகளில் இங்கிலாந்து அணி நேற்று ஈடுபட்ட போதும், லியாம் டாவ்சன் அதில் கலந்து கொள்ளவில்லை.

அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதையின் காரணமாக அவர் பயிற்சிகளை தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் அவர் நாளைய போட்டி உள்ளிட்ட இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் எதிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டிருந்த ஜோ டென்லி (Joe Denly ) ஒருநாள் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.







Exclusive Clips