நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

Tuesday, 23 October 2018 - 14:09

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் ​போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்படி , போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

போட்டி இன்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

ஏலவே இந்த தொடரை 3க்கு0 என்றக் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி இதுவரையில் பயன்படுத்தாத வீரர்களைக் கொண்டு களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பாக இன்று ஜோ டென்லி, ஷாம் கரன் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு இன்று இடமளிக்க வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை அணியில் கசுன் ராஜித்தவிற்கு பதிலாக வேறொருவர் களமிறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

போட்டி இடம்பெறும் ஆர்.பிரேமதாச ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாகும். 

அத்துடன் போட்டியின் போது மழைக் குறுக்கிட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதேவேளை, போட்டி இடம்பெறும் ஆர்.பிரேமதாச ஆடுகளத்தை அண்மித்த பகுதியிலும் மாளிகாவத்தை பகுதியிலும் இன்று நண்பகல் 12.30 மணிக்கு பின்னர் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.







Exclusive Clips