%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%21%21
Friday, 09 November 2018 - 16:40
ஹேரத்தின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வி!!
2

Shares
302

Views
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

காலி மைதானத்தில் இந்தப் போட்டி இன்று நான்காம் நாள் ஆட்டத்துடன் நிறைவடைந்தது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியிருந்த இங்கிலாந்து அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை அணி, 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 6 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதையடுத்து, 462 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 250 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்து.

இன்றைய டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் ர ங்கன ஹேரத் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரங்கன ஹேரத் மொத்தமாக 3 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

40 வயதுடைய ரங்கண ஹேரத் 93 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இன்னிங்ஸ் ஒன்றில் 127 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களும், போட்டி ஒன்றில் 184 ஓட்டங்களுக்கு 14 விக்கட்டுக்களும் கைப்பற்றியமையே ரங்கண ஹேரத்தின் அதிகூடிய விக்கட் பெறுமதியாகும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE