%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
Saturday, 10 November 2018 - 14:19
ஸ்ரீ காந்த் காலிறுதி சுற்றில் தோல்வி
153

Views
சீனா ஓபன் பெட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீ காந்த் காலிறுதி சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
 
சீன ஓபன் பெட்மிண்டன் தொடர் புஜோவ் நகரில் இடம்பெற்று வருகின்றது.
 
அதில் நேற்று இடம்பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீ காந்த் 14க்கு21, 14க்கு21 என்ற நேர்செட் கணக்கில் சீன தைபே வீரர் ஷோ டியான் சென்னிடம் தோல்வியடைந்தார்.
 
இதேநேரம், சீனா ஓபன் பெட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து காலிறுதியில் தோல்வியடைந்தார்.

சீனாவின் ஹி பிங்ஜியாவோ-வை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 17க்கு 21, 21க்கு 17, 15க்கு 21 எனத் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE