%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
Tuesday, 13 November 2018 - 14:03
இங்கிலாந்து அணி தலைவர் வெளியிட்டுள்ள தகவல்
75

Views
இலங்கைக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளராக பென் ஃபோக்ஸ் செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளைய தினம் ஆரம்பமாகிறது.

இதில் விளையாட்டுத்திறன் உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் பென் ஃபோக்ஸை விக்கட் காப்பாளராக செயற்படுத்த அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாளைய தினம் ஆரம்பமாகின்ற டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வீரர்கள் மாற்றம் இன்றி முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணியே களமிறங்கும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், தினேஸ் சந்திமால் காயமடைந்துள்ள நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு சுரங்க லக்மால் தலைமை தாங்கவுள்ளார்.

அதேநேரம் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் முதலாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பிரதியீடு செய்யப்படவுள்ள வீரர் தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE