%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+18+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF
Thursday, 06 December 2018 - 22:01
ஐ.பி.எல் ஏலம் 18 ஆம் திகதி
85

Views
12 ஆவது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் விடும் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி ஜெய்ப்பூரில் இடம்பெறவுள்ளது.

பெரும்பாலான வீரர்கள் அணி நிர்வாகங்களால் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், 70 வீரர்கள் மாத்திரமே ஏலம் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

70 பேரில் 20 பேர் வெளிநாட்டு வீரர்களும் 50 இந்திய வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐபிஎல் தொடரில் மொத்தமாக 232 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 1003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐ.பி.எல். வீரர்களின் ஏலத்துக்கான அடிப்படை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனட்கட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவர் கடந்த தொடரின்போது பதினொன்றரை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அவரை விடுவித்துள்ளது.

இந்த முறை ஏல விற்பணையில் எந்த ஒரு இந்திய வீரரும் 2 கோடி இந்திய ரூபாய் என்ற அடிப்படை விலைப்பட்டியலில் இடம் பெறவில்லை.

அத்துடன், 9 வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE