%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Saturday, 08 December 2018 - 20:07
இந்திய அணி வலுவான நிலையில்
58

Views
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.

இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இந்திய அணி 3 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்திய அணி சார்பில் செடெஸ்வர் புஜாரா 40 ஓட்டங்களுடனும் அஜிங்கியா ரஹானே 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

முன்னதாக அவுஸ்திரேலியா அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 250 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE