பரபரப்பாக இடம்பெறும் இந்தியா, அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி - இரு அணிகளும் போராட்டம்

Monday, 10 December 2018 - 8:10

%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%2C+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றது.

இந்த நிலையில், இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிவரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்வரை 6 விக்கட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதலாவது இன்னிங்சில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.

அத்துடன், இந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் 250 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்ததுடன், இரண்டாவது இன்னிங்சில் 307 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதன் பிரகாரம் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 4 விக்கட்டுக்கள் மீதமிருக்க 137 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.







Exclusive Clips