%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+
Thursday, 13 December 2018 - 8:51
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ள பயிற்றுவிப்பாளர்
59

Views
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர் என அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.

அடிலெய்ட் போட்டியில் மட்டுமல்ல, அதற்கு முன்னதாக இடம்பெற்ற தென்னாபிரிக்கா, இங்கிலாந்து தொடர்களிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டனர்.

ஆடுகளத்தின் தன்மை, சீதோஷ்ண நிலை காணப்பட்டாலும் அதற்கு ஏற்ப வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE