%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 13 December 2018 - 14:47
இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நியமனம்
6

Shares
737

Views
இலங்கை கிரிக்கட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து டெர்ஹாம் கிரிக்கட் கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட ஜொனதன் லூவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரின் முதலாவது போட்டிக்கு முன்னதாக அவர் அணியுடன் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டி வரை அவர் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என ஶ்ரீலங்கா கிரிக்கட் குறிப்பிட்டுள்ளது.

இது வரை அந்த பதவியை வகித்து வந்த திலான் சமரவீர அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE