முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 9 விக்கட் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் குவிப்பு

Saturday, 15 December 2018 - 13:19

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+275+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று நிறைவுபெற்றது.

நியூஸிலாந்தின் வெலிங்டனில் இடம்பெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 அளவில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, இன்றைய முதலாம்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில், திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்யூஸ் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

6 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் டிம் சவுதி 67 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதேவேளை, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, சற்று முன்னர்வரை 2 விக்கட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 326 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips