4ஆம் நாள் ஆட்டம் நிறைவு

Tuesday, 18 December 2018 - 13:50

+4%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்தது.

இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 117 ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸ் 116 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.

முன்னதாக நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 578 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 282 ஓட்டங்களை பெற்றது.

இதேவேளை, இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 146 ஓட்டகளால் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில், விராட் கோலியின் 123 ஓட்ட எண்ணிக்கையுடன், 283 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் அவுஸ்திரேலியா அணி தமது 2வது இன்னிங்ஸில் 243 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்தநிலையில், இந்திய அணி வெற்றி இலக்கான, 287 ஓட்டங்களை நோக்கி 2வது இன்னிங்ஸில் துடுப்பாடி, 140 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
 
 







Exclusive Clips