நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸ் இல்லை

Monday, 31 December 2018 - 13:18

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெத்தியூஸ் விலகியுள்ளார்.

நியூஷிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது, ஏற்பட்ட உடல் ரீதியான உபாதை காரணமாக அவர் விலகியுள்ளதாக, இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்.

உபாதை காரணமாக மெத்தியூஸ் 4 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், இந்த உபாதை காரணமாக, எதிர்வரும் 24 ஆம் திகதி அவுஸ்திரேய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டி உள்ளிட்ட இரு டெஸ்ட் போட்டிகளில் அஞ்ஜலோ மெத்தியூசுக்கு விளையாட முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips