%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
Monday, 14 January 2019 - 13:36
சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள கிரிக்கட் தொடர்
253

Views
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக, இந்தியா - சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெறவிருந்த கிரிக்கட் தொடர் குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக சிம்பாப்பே அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஒரு டெஸ்ட் போட்டியும் மூன்று ஒரு நாள் போட்டிகளும் இரு அணிகளுக்கு இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் இடம்பெறவிருந்தது.

இந்தநிலையில், உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் மற்றும் இந்திய பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரை முன்னதாகவே எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர் குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெறுவதில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த தொடர் சில வேளை, தள்ளிப்போகக்கூடும் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது இந்தியா அணி, அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான  தொடரில் விளையாடி வருகிறது.

அதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், பின்னர் மீண்டும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த போட்டிகள் எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE