அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நுவன் பிரதீப் இல்லை

Sunday, 20 January 2019 - 20:21

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகியுள்ளார்.

தனது இடது தொடையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் போட்டிகளில் இருந்து விலகியதாக, ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா பதினொருவர் அணிக்கு எதிராக இடம்பெற்ற பயிற்சி போட்டியின் போதே அவர் இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்மாகவுள்ளது.

இந்த போட்டி அவுஸ்திரேலியாவின் ப்ரிஸ்பேனில்  இடம்பெறவுள்ளது.







Exclusive Clips