%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
Monday, 21 January 2019 - 8:41
அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி
48

Views
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் பகிரங்க டென்னிஸ் தொடரில் 4வது சுற்றுப் போட்டியில், கிரீஸ் வீரர் டிஸ்டிஸ்பசிடம் (Stefanos Tsitsipas) சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (Roger Federer) தோல்வியடைந்தார்.

அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர், கிரீஸ் நாட்டை சேர்ந்த டிஸ்டிஸ்பசை எதிர்கொண்டார்.

இதில், ரோஜர் பெடரர் 7-6, 6-7, 5-7, 6-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்த வெற்றியின் மூலம் டிஸ்டிஸ்பஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE