குமார் தர்மசேனவிற்கு மீண்டும் விருது!

Tuesday, 22 January 2019 - 7:29

+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%21
கடந்த வருடம் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் வீரர்கள் வௌிக்காட்டிய திறமைகளுக்கு அமைய சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் வருடத்தின் சிறந்த வீர வீராங்கனைகளுக்கான விருதுகளை அறிவித்து பட்டியலொன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி , இலங்கை டெஸ்ட் வீரர் திமுத் கருணாரத்ன இலங்கைக்கான சிறந்த டெஸ்ட் வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்தமை காரணமாக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐசிசி யால் பெயரிடப்பட்டுள்ள வருடத்தின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் தலைவராக விராட் கோஹ்லி பெயரிடப்பட்டுள்ளார்.

வருடத்தின் ஒருநாள் அணிக்கு இலங்கையில் இருந்து எந்தவொரு வீரரும் பெயரிடப்படவில்லை.

இதேவேளை , வருடத்தின் சிறந்த நடுவருக்கான டேவிட் செபர்ட் விருதினை குமார் தர்மசேன பெற்றுள்ளார். அவர் இந்த விருதினை பெறும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மேலும் , வருடத்திற்கான சிறந்த வீரருக்கான சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் விருதினையும் , வருடத்திற்னான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதினையும் மற்றும் வருடத்திற்கான சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதினையும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  







Exclusive Clips