%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%21%21
Tuesday, 22 January 2019 - 16:16
புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி!!
1,510

Views
2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கட் பேரவையின் சிறந்த வீரர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கட்டின் சிறந்த வீரர் என மூன்று விருதுகளையும் கைப்பற்றி இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரைவ ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களுக்கான விருதை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று அறிவித்தது.

இந்திய அணி தலைவர் விராட் கோலி 3 ஐசிசி விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரர் (சோபர்ஸ் டிராபி), சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் என 3 விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.

இதன் மூலம் விராட் கோலி புதிய வரலாறு படைத்தார்.

ஒரே ஆண்டில் (சிறந்த வீரர், டெஸ்ட், ஒரு நாள் போட்டி) 3 ஐசிசி விருதுகளை பெற்ற முதல் வீரர் ஆவார்.

மேலும் 2018 ஆம் ஆண்டின் டெஸ்ட் தலைவர் மற்றும் ஒரு நாள் போட்டி தலைவராகவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோலி கடந்த ஆண்டில் 13 டெஸ்டில் விளையாடி 1,322 ஓட்டங்களை பெற்றார்.சராசரி 55.08 ஆகும். இதில் 5 சதம் அடங்கும்.

14 ஒரு நாள் போட்டியில் விளையாடி 1,202 ஓட்டங்களை பெற்றார்.

இதில் 6 சதங்கள் அடங்கும். சராசரி 133.55 ஆகும்.

பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி 211 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் அவர் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடியதால் ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் என 3 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE