திசர பெரேராவின் சிறந்த துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பங்களாதேஷ் இருபதுக்கு இருபது போட்டியில் நேற்றைய தினம் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது.
நேற்றைய போட்டியில் Dhaka Dynamites மற்றும் Comilla Victorians அணிகள் மோதிய நிலையில் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Dhaka Dynamites அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய Comilla Victorians அணி, 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஷம்சிர் ரஹ்மான் 48 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 34 ஓட்டங்களை அதி கூடிய ஓட்டங்களாக பெற்றுக் கொடுத்தனர்.
பின்ன தொடர் ஆட்டமிழப்புக்களை தொடர்ந்து களம் இறங்கிய திசர பெரேரா 12 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் Comilla Victorians அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
154 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Dhaka Dynamites அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
Dhaka Dynamites அணியில் AD Russell அதிரடியாக துடுப்பெடுத்தாடியமை குறிப்பிடத்தக்கது.
AD Russell 24 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அணியினை வெற்றி இலக்கிற்கு வேகமாக கொண்டு சென்ற நிலையில் AD Russell ஆட்டமிழந்தனை தொடர்ந்து தொடர் விக்கட்கள் வீழ்த்தப்பட்டன.
பந்து வீச்சில் திசர பெரேரா 03 ஓவர்கள் வீசி 14 ஓட்டங்களை கொடுத்து 03 விக்கட்களை கைபற்றியமை குறிப்பிடத்தக்கது.