%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21%21
Wednesday, 23 January 2019 - 13:02
இலகுவான வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி!!
290

Views
இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதாலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

நியூஸிலாந்தின் நேப்பியரில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி இடம்பெறுகிறது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 38 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடி வரும் இந்திய அணி, சற்று முன்னர் வரை 18 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE