முதல் போட்டியில் இந்தியா இலகு வெற்றி

Wednesday, 23 January 2019 - 19:15

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி, டக்வர்த் லுயிஸ் முறையில் 8 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

நியூஸிலாந்தின் நேப்பியரில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 38 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 10 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், அதிக பிரகாசமான வெயில் காரணமாக போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

பின்னர், டகவர்த் லுயிஸ் முறைப்படி 49 ஓவர்களில் 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 34.5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.








Exclusive Clips