பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இந்திய கிரிக்கட் அணி வீரர்கள் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கட் சபை கோரியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் எசான் மானி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட பகிஸ்தான் சுப்பர் லீக் வர்த்தக நாமத்தின் கீழ், அனைத்துப் போட்டிகளும் அடுத்த ஆண்டு பாகிஸ்தானிலேயே நடத்தப்படும்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள தொடரின் எட்டு போட்டிகள் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளன.
இந்த தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 45 வெளிநாட்டு வீரர்களும், பாகிஸ்தானில் விளையாடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும் தமது வீரர்களை பாகிஸ்தானிற்கு சென்று விளையாட அனுமதிக்க வேண்டும் என்று எசான் மானி தெரிவித்துள்ளார்.