கன்னி டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவை திணரடித்த இலங்கை வீரர்!!

Friday, 15 February 2019 - 17:47

%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%21%21
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அதன்படி , இலங்கை அணிக்கு 303 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் டூ ப்ளசிஸ் 90 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

குவின்டன் டி கொக் 55 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் லசின் எம்புல்தெனிய 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

விஷ்வ பிரனாந்து 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

முன்னதாக தனது முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 235 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் , இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதன்படி , 303 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கட் இழப்பின்றி 7 ஓட்டங்ளைப் பெற்றுள்ளது.







Exclusive Clips