குமார் சங்கக்கார மற்றும் மஹேல, குசல் தொடர்பில் வெளியிட்ட கருத்து..

Sunday, 17 February 2019 - 14:28

%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%2C+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
திமுத் கருணாரட்னவின் தலைமையிலான இலங்கை கிரிக்கட் அணி, தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு பல தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 
இந்த வகையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, திமுத் கருணாரட்னவின் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணிக்கு வாழ்த்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
 
இந்த டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடும் சிரத்துடன் செயல்பட்ட குஷல் ஜனித் பெரேரா போன்று ஏனைய வீரர்களும் மன திடத்துடன், செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாட்டு மைதானங்களில், இலங்கை அணி வீரர் ஒருவர் சிறந்த வெற்றிக்காக போராடிய முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, இக்கட்டான சூழ்நிலையில், மன தைரியத்துடன் களத்தில் நின்று ஓட்டங்களை பெற்ற இலங்கை அணியின் வீரர் குஷல் ஜனித் பெரேராவை ஏனையவர்களும் பின்பற்ற வேண்டும் என முன்னாள் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
 







Exclusive Clips