%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Friday, 22 February 2019 - 15:54
இறுதி டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை
10

Shares
1,290

Views
சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுமதியுமான டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

போட்டியில் முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய தொன்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது.

இலங்கையின் முதலாவது இன்னிங்ஸில் நிரோசன் திக்வெல்ல 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டதுடன், லஹிரு திரிமன்ன 29 ஓட்டங்களையும், குசல் பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய வீரர்கள் சொற்பட ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரபாடா 4 விக்கட்டுக்களையும், ஒலிவிர் 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

இலங்கையின் முதலாவது இன்னிங்ஸ் ஓட்டங்களை விட 68 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள தென்னாபிரிக்க அணி தற்சமயம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வருகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE