%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
Friday, 22 February 2019 - 20:11
தென்னாபிரிக்காவை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை வெற்றியை நோக்கி
31

Shares
3,728

Views
சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்க அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 222 ஓட்டங்களுக்கு சலக விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 197 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE