மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Saturday, 23 February 2019 - 7:20

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
 
197 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற ஓட்ட இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 2  விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்தது.
 
இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் இன்னும் 137 ஓட்டங்களை பெற்று கொள்ள வேண்டும்.
 
முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க சகல விக்கட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.
 
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தடிய தென்னாபிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களையும், இலங்கை அணி 9 விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களையும் பெற்று கொண்டன.
 







Exclusive Clips