%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%21
Friday, 15 March 2019 - 20:02
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள பிரபல வீரர்!
261

Views
2019ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தென்னாபிரிக்க சகலதுறை வீரரான ஜே.பி. டுமினி  தெரிவித்துள்ளார்.

34 வயதான அவர் 2004 ஆம் ஆண்டு தொழில் முறை கிரிக்கட்டில் இணைந்து கொண்டார்.

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜே.பி. டுமினி, எதிர்வரும் உலக கிண்ண போட்டிகளில் பங்கு கொள்வதன் மூலம் மூன்றாவது உலக கிண்ண போட்டிகளில் பங்கு கொண்டவர் என்ற பெருமையை அடைவார்.

இந்த நிலையில், ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள அவர் 20க்கு 20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் தென் ஆபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே நடைபெறும் இறுதி ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி, ஜே.பி. டுமினி இன் சொந்த ஊரான நியூலாண்ட்ஸ் இல் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், ஜே.பி. டுமினி தனது சொந்த ஊரில் விளையாடும் இறுதி சர்வதேச போட்டியாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இல் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2019ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண போட்டிகளில், தென்னாபிரிக்க அணி சார்பாக தெரிவாகும் 15 பேரை கொண்ட குழுவில் ஜே.பி. டுமினி உள்ளடக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE