%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88
Sunday, 17 March 2019 - 19:54
ஐ.பி.எல் முழு அட்டவணை நாளை
371

Views
இந்த வருடத்திற்கான இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணையை நாளை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வெளியிடவுள்ளது.

இந்தியாவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப குறித்த அட்டவணை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 5ம் திகதி வரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணையை மட்டுமே முன்னர் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு போட்டிகளுக்கான முழு அட்டவணை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

12வது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் ஆரம்பமாகவுள்ளது.

சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், இரவு 8.00 மணிக்கு இடம்பெறும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE