உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் தலைவர் இவரா?

Tuesday, 19 March 2019 - 10:36

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%3F
இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் போட்டிகளில் கலந்துகொள்ளாது மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் கலந்து கொள்ளுமாறு இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை அவருக்கும் வழங்கும் நோக்கில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இங்கிலாந்து ஹெம்ப்ஷயர் மாநில அணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் திமுத் கருணாரத்ன , உலகக்கிண்ண இலங்கை குழாமிற்கு தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஹெம்ப்ஷயர் அணிக்காக விளையாடும் வாய்ப்பு பறிபோகும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் , கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண தொடரில் ஒருநாள் போட்டியொன்றில் திமுத் இறுதியாக  விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது , இலங்கை ஒருநாள் அணித் தலைவராக லசித் மாலிங்க செயற்படும் நிலையில் , அவர் தலைமையில் இலங்கை அணி பங்கேற்ற 9 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள காரணத்தால் எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கு புதிய தலைவரொருவரை நியமித்துக் கொள்ள கிரிக்கட் தேர்வுக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







Exclusive Clips