இலங்கை , தென்னாபிரிக்கா இறுதி T20 போட்டிக்கு பாதிப்பு

Sunday, 24 March 2019 - 21:04

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%2C+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+T20+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணிக்கு 199 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாரிபிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 198 ஒட்டங்களை குவித்தது.

அவ்வணி சார்பில் , ரிஷா ஹென்த்ரிகஸ் 66 ஓட்டங்களையும் டிவைன் ப்ரோட்டோரியஸ் 77 ஓட்டங்களையும் குவித்தனர்.

போட்டியின் இறுதி ஓவர்களில் ஜே.பி.டுமினி 14 பந்துகளில் 34 ஒட்டங்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது , போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போட்டி இடைநிறுத்தப்படும் போது , பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 11.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 111 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 38 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுள்ளார்.







Exclusive Clips