மாலிங்கவினால் பிசிசிஐ யிடம் திட்டு வாங்கிய இலங்கை கிரிக்கட் சபை!!

Monday, 25 March 2019 - 16:30

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90+%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%21%21
இந்தியாவில் இத்தினங்களில் இடம்பெற்றுவரும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துக்கொள்வதற்கு இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணித்தலைவர் லசித் மாலிங்க இன்று இந்தியா செல்லவுள்ளார்.

எவ்வாறாயினும் , ஐபிஎல் போட்டித் தொடரின் முதல் 6 போட்டிகளில் தான் பங்கேற்கப்போவதில்லை என லசித் மாலிங்க தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சூப்பர் மாகாண ஒருநாள் கிரிக்கட் தொடரில் இலங்கை அணி வீரர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தால் , அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் , லசித் மாலிங்க காலி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் , ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் இடம்பெறும் போது இலங்கை கிரிக்கட் நிறுவனத்தால் சூப்பர் மாகாண கிரிக்கட் தொடர் குறித்து எவ்வித அறிவிப்பும் வௌியிடப்படவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , குறித்த பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை இலங்கை கிரிகட் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.








Exclusive Clips