%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%21
Wednesday, 17 April 2019 - 13:21
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி..!
275

Views
ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் 33வது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது.
 
ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.
 
இதேவேளை இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையிலான புள்ளி வழங்கல் பட்டியலில், சென்னை சுப்பர் கிங்ஸ் 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
 
தலா பத்து புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லி கெப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் ஆகிய அணிகள் நிகர ஓட்ட விகித வித்தியாசத்தின்படி 2ம் 3ம் மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன.
 
கொல்கட்டா 8 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும் உள்ளன.
 
ராஜஸ்தான் ரோயல்ஸ் 4 புள்ளிகளைப் பெற்று 7ம் இடத்தில் உள்ள அதேநேரம், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் இரண்டு புள்ளிகளுடன் இறுதி இடத்தில் இருக்கிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE