+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88++%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D++%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
Wednesday, 17 April 2019 - 19:21
சென்னை மற்றும் ஐதராபாத் மோதும் போட்டி இன்று...
159

Views
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான வழிகாட்டல் குழுவில் முன்னாள் வீரர் ராம்நரேஷ் சர்வான் இணைக்கப்பட்டுள்ளார்.

இதற்காக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் நடைபெறவுள்ள மும்முனை ஒருநாள் தொடரிலும், உலக கிண்ணத் தொடரிலும் அணியின் வீரர்களுக்கான, துடுபாட்ட வழிகாட்டியாக அவர் செயற்படவுள்ளார்.

எனினும் அவர் உலக கிண்ணத் தொடருக்காக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணைந்து பயணியாற்றுவாரா என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

38 வயதான சர்வான், 87 டெஸ்ட் போட்டிகளில் 5,842 ஓட்டங்களையும், 181 ஒருநாள் போட்டிகளில் 5,804 ஓட்டங்களையும், 18 20க்கு20  போட்டிகளில் 298 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

இதேவேளை. இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றிரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.
 
 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE