இலங்கை அணிக்கு இமாலய இலக்கு..!

Friday, 24 May 2019 - 19:35

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..%21+
இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான பயிற்சி ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இங்கிலாந்தின் கார்டிஃப்பில்  தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை இரண்டு விக்கட்டுக்களை இழந்து 14 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியும் இங்கிலாந்தின் ப்ரிஸ்ரலில்  தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 47.5 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் ஆப்கானிஸ்தான் அணி விக்கட் இழப்பின்றி 55 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.









Exclusive Clips