பயிற்சிப் போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து

Sunday, 26 May 2019 - 8:23

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்காக நேற்று இடம்பெற்ற இரண்டு பயிற்சிப் போட்டிகளில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் வெற்றி பெற்றன.

இந்திய அணியுடன் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து அணி, 6 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

லண்டனில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 39.2 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி, 37.1 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதேவேளை, இங்கிலாந்துக்கு எதிராக சவுத்தம்டனில் இடம்பெற்ற மேலும் ஒரு போட்டியில் அவுஸ்திரேலிய அணி, 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 298 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 49.3 ஓவர்களில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.









Exclusive Clips