41 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அணி வெற்றி...

Thursday, 13 June 2019 - 8:13

41+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...
அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பாக டேவிட் வோர்னர் 107 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமிர் ஐந்து விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த நிலையில், 308 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி,  45.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் பெட் கம்மின்ஸ் மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினார்.







Exclusive Clips