மக்காவோ காற்பந்து சம்மேளனத்தின் முடிவுக்கு எதிர்ப்பு

Friday, 14 June 2019 - 13:09

%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மக்காவோ நாட்டின் தேசிய காற்பந்தாட்ட அணியை இலங்கைக்கு அனுப்பாதிருக்க அந்த நாட்டின் காற்பந்து சம்மேளனம் மேற்கொண்ட முடிக்கு எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அந்த அணியின் தலைவரால் சர்வதேச காற்பந்து சம்மேளனத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டியின் முதல் சுற்றில் இலங்கை அணி மக்காவோ சென்று விளையாடி தோல்விகண்டது.

அதன் இரண்டாம் சுற்று இலங்கையில் நடைபெறவிருந்த போதும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தமது அணியை இலங்கைக்கு அனுப்ப முடியாது என்று மக்காவோ அறிவித்தது.

இதனை அடுத்து இந்த போட்டியை ஆசிய காற்பந்து சம்மேளனம் ரத்து செய்தது.

இந்த விடயத்தில் சர்வதேச காற்பந்து சம்மேளனம் தலையிட்டு இந்த போட்டியை மீள நடத்த வேண்டும் என்று மக்காவோ அணியின் தலைவர் கோரியுள்ளார்.

இதேவேளை, உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 19வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளும் இங்கிலாந்தும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.







Exclusive Clips