புள்ளி பட்டியலில் முதலாம் இடத்தை அடைந்த இங்கிலாந்து அணி

Wednesday, 19 June 2019 - 8:57

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
ஆப்கானிஸ்தான் அணியுடனான நேற்றைய வெற்றியை அடுத்து, இங்கிலாந்து உலகக்கிண்ண லீக் போட்டிகளின் புள்ளி பட்டியலில் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. 

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 397 ஓட்டங்களைப்பெற்றது.

இயன்மோகன் 148 ஓட்டங்களை 71 பந்துகளில் பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்து துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி கண்டது. 

இதன்மூலம் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து நான்கு வெற்றிகளுடன் மொத்தமாக 8 புள்ளிகளைப்பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

அவுஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தலா 7 புள்ளிகளுடன் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் உள்ளன.

பங்களாதேஸ் 5 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், இலங்கை 4 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும் இருக்கின்றன.

மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளைப் பெற்று ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் இடங்களில் உள்ளன. 

ஆப்கானிஸ்தான் புள்ளிகள் எதனையும் பெறவில்லை.
 
 







Exclusive Clips