+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
Saturday, 20 July 2019 - 8:19
இலங்கை அணி குழாம் அறிவிப்பு...!
862

Views
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி குழாமை தெரிவு செய்வதற்காக, இந்திய அணியின் தேர்வுக்குழு நாளைய தினம் மும்பையில் கூடவுள்ளது.

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், வீரர்களின் உடற்தகுதி தொடர்பான அறிக்கை இன்று மாலை கையளிக்கப்பட்டதை அடுத்து, நாளைய தினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் அணி குழாமை தேர்வு செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடருக்கான 22பேர் கொண்ட இலங்கை அணி குழாம் விளையாட்டுத்துறை அமைச்சினால் நேற்று அறிவிக்கப்பட்டது.

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்காத நிரோஷன் திக்வெல்ல, தனுஸ்க குணதிலக்க மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் குழாமில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தினேஸ் சந்திமால் இந்தக் குழாமில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

திமுத் கருணாரட்ன தலைமையிலான குழாமில், குசல் ஜனித் பெரேரா, அவிஸ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்யூஸ், லஹிரு திரிமன்னே, செஹான் ஜெயசூரிய, தனஞ்சய டி சில்வா, தசுன் சானக, வனிது அசரங்க, அமில அபொன்சு, லக்ஷான் சந்தகன், லசித் மலிங்க, நுவான் ப்ரதீப், கசுன் ராஜித, லஹிரு குமார, திஸர பெரேரா, இசுறு உதான, லஹிரு மதுசங்க ஆகியோர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE