%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B7%E0%AE%BE++%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 20 July 2019 - 13:48
மஷ்ரப்பி மூர்தஷா நீக்கம்
442

Views
உடல் உபாதை காரணமாக, பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரப்பி மூர்தஷா  இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணிக்கு தமிம் இக்பால்  தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
நேற்றைய தினம் இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது மூர்தஷா உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

இதேநேரம், பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் சைஃப்புதீனும் உடல் உபாதை காரணமாக இலங்கை அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த இருவருக்கும் பதிலாக டஸ்கின் அஹ்மட் , ஃபர்ஹட் ரெஸா ஆகியோர் பங்களாதேஷ் அணி குழாமில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE