%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+-+%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D
Sunday, 21 July 2019 - 8:05
உலக கிண்ண இறுதி போட்டியின் முடிவு நியாயமானதல்ல - ஒய்ன் மோகன்
1,115

Views
உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளுக்கு இடையில் பாரிய வித்தியாசம் இல்லாத பொழுதில் இது போன்ற முடிவுகள் நியாயமானதல்ல என இங்கிலாந்து அணித் தலைவர் ஒய்ன் மோகன் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டி நிறைவடைந்து ஒருவாரமாகியுள்ள நிலையில், ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ள போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி வெற்றியை கொண்டாட முடியாது என்றும், ஆனால், அதற்கு தாங்கள் தகுதியானவர்கள் என்றும் மோகன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி, சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிவடைந்தமையினால், பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE